உலக அரங்கில் இந்தியாவை ஜொலிக்க செய்யும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்

இந்தியா

உலக அரங்கில் இந்தியாவை ஜொலிக்க செய்யும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்

உலக அரங்கில் இந்தியாவை ஜொலிக்க செய்யும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது –  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்

உலக அரங்கில் இந்தியாவை ஜொலிக்க செய்யும் பொறுப்பு, நம் அனைவருக்கும் உள்ளது என வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடந்த 16-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- இந்தியாவின் உயர் கல்வி அமைப்பு, கிராமங்களுக்கும், பின்தங்கிய மக்களுக்கும் சேவை செய்யும் அளவுக்கு விரிவடைந்துள்ளது மிகுந்த திருப்தி அளிக்கும் விஷயம். உலகில் மூன்றாவது பெரிய கல்வி அமைப்பாக, இந்திய உயர் கல்வி அமைப்பு மாறியுள்ளது. ஆனாலும், முழு நிறைவு ஏற்படவில்லை. இன்னும் உயரத்துக்கு செல்ல நாம் விரும்பினால், இழந்த நேரத்தை நாம் கைப்பற்ற வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்துக்கு முன்பே, சிறப்பான கல்வி முறை இந்தியாவில் இருந்தது. அந்த அழகான மரத்தை சீர்திருத்தம் என்ற பெயரில் ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் வெட்டி விட்டனர் என காந்தியடிகள் கூறினார். அத்தகைய கடுமையான மாற்றங்களிலிருந்து நாம் இன்னும் முழுமையாக மீண்டு நமது மரபுகளை மீட்டெடுக்க வில்லை. இந்த நோக்கில், தேசிய கல்வி கொள்கை 2020 நன்கு திட்டமிடப்பட்ட உறுதியான நடவடிக்கை ஆகும்.


சமூகத்தின் தேவைகளுக்கு சேவை செய்வதோடு, கற்றலை தனிப்பட்ட வளர்ச்சியின் ஒரு பகுதியாக ஆக்குவதற்கு, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கல்வி கற்கும் முறையை மாற்றுவதற்கான முழுமையான தொலைநோக்கு புதிய கல்வி கொள்கையில் உள்ளது. வளமான, தற்சார்பு இந்தியாவை உருவாக்க என்ன தேவை என்பதை புதிய கல்வி கொள்கை கணக்கிடுகிறது. இதற்கு, உயர் கல்வி முறை, சமத்துவம், நிபுணத்துவம் மற்றும் மேம்பாட்டை ஏற்படுத்த வேண்டும். இந்த நோக்கங்களை அடைய புதிய கல்வி கொள்கை முயற்சிக்கிறது. சர் சி.வி. ராமன் கூறியது போல், உயர் கல்வி நிறுவனங்கள், நாட்டை அறிவு வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதுதான் புதிய கல்வி கொள்கையின் உந்துதல்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட சுமார் 20 ஆண்டு குறுகிய காலத்துக்குள், நாட்டின் பிரபல பல்ககைல்கழகங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இது முன்னணி நிறுவனமாக உருவாகி, கல்வியில் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் பலருக்கு தரமான கல்வியை வழங்குகிறது. இதில் சமூகத்தில் சவாலான பிரிவுகளைச் சேர்ந்த பெண்களும் உள்ளனர். இந்த பல்கலைக்கழக மாணவர்களில் 65 சதவீதம் பேர் பெண்கள் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நமது பெண்கள் தடைகளை தகர்த்து, அனைத்து துறைகளிலும் வெற்றியடைகின்றனர். தங்கப் பதக்கங்கள் வெற்ற 66 மாணவர்களில், 55 பேர் பெண்கள். அதேபோல் டாக்டர் பட்டம் பெற்ற 217 பேரில் 100 பேர் பெண்கள். இது இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது. நாட்டின் பெண்கள் கல்வி கற்றவர்களாக இருப்பது, அவர்களின் எதிர்காலத்தை மட்டும் பாதுகாக்கவில்லை, ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாக்கிறது.

உலக அரங்கில், இந்தியாவை ஜொலிக்கச் செய்யும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அமைதியாக ஒன்றாக வாழ்வது எப்படி, இயற்கையை வளர்ப்பது எப்படி என்ற முக்கியமான பாடங்களை உலகுக்கு கற்பிப்பதில், நமது நாடு தனிச்சிறப்பான இடத்தில் உள்ளது. அதிக பொருளாதார வளர்ச்சி மற்றும் அதி சமத்துவத்தை இந்தியா அடைவதால், அதிகம் கற்க, உலகம் நம்மை நோக்கி திரும்புகிறது. இவை ஒவ்வொன்றும், இந்திய சரித்திரத்தில் அடுத்த அத்தியாயத்தை எழுதும் திறன் கொண்டவை. இதற்கு தேவைப்படுவது எல்லாம், சரியான லட்சியம் மட்டுமே. இவ்வாறு குடியரசுத் தலைவர் பேசினார்.

Leave your comments here...