காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் பாராட்டி கண் கலங்கி பேசிய பிரதமர் மோடி.!

அரசியல்இந்தியா

காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் பாராட்டி கண் கலங்கி பேசிய பிரதமர் மோடி.!

காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத்  பாராட்டி கண் கலங்கி பேசிய பிரதமர் மோடி.!

காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத்தின் மாநிலங்களவை பதவிக்காலம் இன்றுடன் முடிவதால் பிரியாவிடை தந்து பிரதமர் மோடி பேசினார்.

காஷ்மீரை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியின் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது பதவி காலம் வரும் 15ல் முடிவுக்கு வருகிறது. காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர், சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே குலாம் நபி சுாத் மீண்டும் ராஜ்யபசா எம்.பி.,யாக அங்கிருந்து தேர்வாக வாய்ப்பில்லை. இந்நிலையில், ராஜ்யசபாவில் ஓய்வு பெறும் எம்.பி.,க்களுக்கான பிரிவு உபசார விழா நடந்தது.


அப்போது, அவர்களை பாராட்டி மோடி:- குலாம் நபி ஆசாத் சிறந்த மனிதர், அவருக்கு கர்வம் எப்போதும் இருந்ததில்லை என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். மேலும் குலாம் நபி ஆசாத்தை புகழ்ந்து பேசியபோது பிரதமர் மோடி கண் கலங்கினார். அரசியல் ரீதியாக முக்கிய ஆலோசனைகளை பலமுறை குலாம் நபி ஆசாத் எனக்கு கூறி உள்ளார் என்றும் பிரதமர் மோடி கூறினார். இவர் அவையை விட்டு போனாலும் அவரது அறிவுரகைள் , கருத்துக்கள் என்றும் தேவைப்படும். அவருக்கு நான் தலைவணங்குகிறேன், என கண்கலங்கியவாரே பேசினார். மேலும் ” ஆசாத் சல்யூட் ” என நெற்றியில் கை வைத்து அடித்து காட்டினார். இந்நேரத்தில் அவையில் உறுப்பினர்கள் பலரும் உணர்ச்சிப்பூர்வமாக காணப்பட்டனர்

Leave your comments here...