தனியார் அகாடமி சார்பில் நண்பர்களுக்கான செஸ் போட்டி.!

விளையாட்டு

தனியார் அகாடமி சார்பில் நண்பர்களுக்கான செஸ் போட்டி.!

தனியார் அகாடமி சார்பில்  நண்பர்களுக்கான செஸ் போட்டி.!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் அகாடமி சார்பில் நண்பர்களுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் தனியார் அகாடமி சார்பில் செஸ்கமிட்டி நண்பர்களுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. இதில், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து செஸ் கமிட்டி உறுப்பினர் 100- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்றனர்.

7 சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டியில் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வயதானவர்களும் போட்டியில் பங்கேற்றனர். மேலும் , கொரோணா காலத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நிகழாமல் இருந்ததால், தற்போது கமிட்டி நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு பாதுகாப்பான முறையில் இப்போட்டியை, நடத்துவதாக அகாடமி சார்பில் தெரிவித்தனர்.

Leave your comments here...