கொரோனா பணிகளில் 6.47 கோடிப் பேருக்கு உதவி ; நேரு யுவகேந்திரா, என்.எஸ்.எஸ் தன்னார்வலர்களின் சாதனை.!

இந்தியா

கொரோனா பணிகளில் 6.47 கோடிப் பேருக்கு உதவி ; நேரு யுவகேந்திரா, என்.எஸ்.எஸ் தன்னார்வலர்களின் சாதனை.!

கொரோனா பணிகளில் 6.47 கோடிப் பேருக்கு உதவி ;  நேரு யுவகேந்திரா, என்.எஸ்.எஸ் தன்னார்வலர்களின் சாதனை.!

கொரோனா தொடர்பான பணிகளில் 6.47 பேருக்கு உதவிக்கரம் நீட்டி நேரு யுவகேந்திரா, நாட்டு நலப் பணித்திட்ட தன்னார்வலர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கடந்த 2020-ஆம் ஆண்டு இளைஞர் விவகாரங்கள் துறை மேற்கொண்ட முக்கியப் பணிகள்:

• மக்கள் இயக்கம்: கொவிட்- 19-க்கு எதிரான போராட்டத்தில் சரியான நடத்தை முறையைப் பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

• கொவிட் காலத்தில் முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன.

• 2.19 கோடி பேரை ஆரோக்கிய சேது செயலியை தரவிறக்கம் செய்யுமாறு தன்னார்வலர்கள் ஊக்குவித்தனர்.

• கொவிட்வாரியர்ஸ்.கவ்.இன் (covidwarriors.gov.in) என்ற தளத்தில் 61.35 இலட்சம் தன்னார்வலர்கள் பதிவு செய்தனர்.

• வீட்டிலிருந்து முகக் கவசங்களைத் தயாரிப்பது குறித்து 1.46 கோடி மக்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

• கொவிட்-19-லிருந்து 22.78 இலட்சம் முதியோரைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

• இந்த காலகட்டத்தில் 7.39 இலட்சம் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உதவிகள் அளிக்கப்பட்டன.

• கொவிட்-19 பெருந்தொற்றின்போது 19 இலட்சம் தன்னார்வலர்கள் சேர்க்கப்பட்டனர்.

• ஒருங்கிணைந்த அரசு இணையதளப் பயிற்சி/ சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்/உலக சுகாதார நிறுவனம்/ தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் குறித்த பயிற்சிகள் 62 இலட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டன.

• ஊட்டச்சத்துத் திட்டத்தின் கீழ் நேரு யுவகேந்திராக்கள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ஊட்டச்சத்து சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டன.

• நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள் மற்றும் உன்னத இந்தியா திட்டம் மூலம் தேசிய வலைத்தள கருத்தரங்கம் வாயிலாக தேசிய கல்விக் கொள்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

• தேசிய கல்வி கொள்கை 2020-இன் முக்கிய அம்சங்கள் குறித்து மொத்தம் 3.90 கோடி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

• ராஷ்ட்ரீய ஸ்வச்தா கேந்திரா துவங்கப்பட்டதுடன் காண்டகி முக்த் பாரத் என்ற முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

• ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டம் 2020-2021, காணொலி வாயிலாக (வலைதளக் கருத்தரங்கம்) நடைபெற்றது.

Leave your comments here...