கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகையை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறார் டாக்டர் ஹர்ஷ் வர்தன் .!

இந்தியாதமிழகம்

கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகையை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறார் டாக்டர் ஹர்ஷ் வர்தன் .!

கொரோனா  தடுப்பு மருந்து ஒத்திகையை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறார் டாக்டர் ஹர்ஷ் வர்தன் .!

கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகைக்கு நாடு தயாராகி வரும் நிலையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அதை ஆய்வு செய்வதற்காக தமிழகம் வருகிறார்.

இன்றிரவு சென்னை வந்தடையும் அமைச்சர், தடுப்பு மருந்து ஒத்திகைக்கான தயார்நிலையையும், செயல்பாடுகளையும் நாளை ஆய்வு செய்கிறார்.

நாளை, சென்னையிலுள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஆகியவற்றை அமைச்சர் பார்வையிடுகிறார். பெரியமேட்டில் உள்ள பொது மருத்துவப் பொருட்கள் சேமிப்பகத்தை பார்வையிடும் அவர், அப்போலோ மருத்துவமனையில் உள்ள தடுப்பு மருந்து மையத்தையும் பிற்பகலில் பார்வையிடுகிறார்.

பின்னர், செங்கல்பட்டில் உள்ள தடுப்பு மருந்து மையத்தையும், இந்துஸ்தான் பயோ-டெக் லிமிடெட் வளாகத்தையும் அவர் பார்வையிடுகிறார்.சென்னை பெரியமேட்டில் உள்ள சேமிப்பகம், நம் நாட்டிலுள்ள நான்கு தேசிய தடுப்பு மருந்து சேமிப்பகங்களில் ஒன்றாகும். மும்பை, கொல்கத்தா, கர்னலிலும் இத்தகைய மையங்கள் உள்ளன.

நாடு முழுவதுமுள்ள 33 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 736 மாவட்டங்களில் கொவிட்-19 தடுப்பு மருந்துக்கான ஒத்திகை நாளை நடைபெறுகிறது.

Leave your comments here...