5 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயி வேதனை.!

சமூக நலன்

5 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயி வேதனை.!

5 ஏக்கர் நெல் பயிர்கள்  நீரில் மூழ்கியதால் விவசாயி வேதனை.!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கோவிலூர் பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. இதில் பொன்னி, கர்நாடக பொன்னி உள்ளிட்ட உயர் ரக நெல் பயிரிடப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் ராமர் என்பவர் விவசாயம் செய்து வரக்கூடிய சுமார் 5 ஏக்கர் வயலில் நெல் பயிரிட்டுள்ளார் தற்போது விளைந்து ஆறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நேற்று பெய்த மழையில் சுமார் 5 ஏக்கர் நெல்கள் முற்றிலும் நீரில் மூழ்கி வீணாகிவிட்டது.

தற்போது தான் நெல் பால் விட்டு வர கூடிய நிலையில், நீரில் மூழ்கி இருப்பது விவசாயிகள் மத்தியில் வேதனை அளித்தது.தமிழக அரசும், மத்திய வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பிலும் பார்வையிட்டு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Leave your comments here...