இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் வெற்றிக்கு வண்ண பலூன்கள் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு.!

சமூக நலன்

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் வெற்றிக்கு வண்ண பலூன்கள் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு.!

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்  வெற்றிக்கு வண்ண பலூன்கள் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு.!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இந்தியாவுக்கு சொந்தமான சி.எம்.எஸ்-01 என்ற சி பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு, செயற்கைகோள் வடிவமைத்து மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பாராட்டு தெரிவித்தனர்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், கடந்த மாதம் 7ம் தேதி பி.எஸ்.எல்.வி-சி 49, ராக்கெட் மூலம் இஓஎஸ்-01 என்ற நவீன ரக புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்நிலையில், பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. இந்த தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்த உதவும் சி.எம்.எஸ்-01 என்ற செயற்கைக்கோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இதில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருக்கின்றன. இது இந்தியாவின் 52-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.

மேலும்,பூமி கண்காணிப்பு பணிக்காக உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, இந்திய பகுதி, அந்தமான் மற்றும் நிகோபர், லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நீட்டிக்கப்பட்ட-சி பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான நோக்கில் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது என்கிற தகவலை மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ,ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள் ஆகியோர் இணையம் வழியாக எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் தலைவர் சிவன் மற்றும் அனைத்து விஞ்ஞானிகள், பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவித்தனர்

Leave your comments here...