கொரோனா நோயிலிருந்து மக்கள் விடுபட கோமாதா கிராமதேவதை வழிபாடு…!

ஆன்மிகம்

கொரோனா நோயிலிருந்து மக்கள் விடுபட கோமாதா கிராமதேவதை வழிபாடு…!

கொரோனா நோயிலிருந்து மக்கள் விடுபட கோமாதா கிராமதேவதை வழிபாடு…!

விருதுநகர் மாவட்ட ராஜபாளையம் ஸ்ரீகோதண்டராம சுவாமி திருக்கோவிலில் கொரோனா நோயிலிருந்து, உலக மக்கள் பூரணமாக விடுபட வேண்டி, கோமாதா கிராமதேவதை வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

ராஜபாளையம் சிங்கராஜா கோட்டை பெரிய தெருவில், பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோவிலில், கொரோனா வைரஸ் நோயிலிருந்து மக்கள் பூரணமாக விடுபட வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பாக நடைபெற வேண்டியும், பசுங்கன்று உருவம் செய்து இரண்டு நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இரண்டு நாட்களும் பெண்கள், சிறுமிகள் கோலாட்டம், கும்மிப்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பசுங்கன்று உருவத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, பெண்கள் முளைப்பாரி சுமந்துவர சொக்கர் கோவில் தெப்பத்தில் பசுங்கன்று கரைக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராஜபாளையம் பிராமணர் சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave your comments here...