இந்திய எல்லைக்குள் வழித்தவறி வந்த ஆக்கிரமிப்பு காஷ்மீர் சிறுமிகள் ; பரிசுகள் கொடுத்து திருப்பி அனுப்பிய இந்திய ராணுவ வீரர்கள்

இந்தியா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கஹூதா பகுதியை சேர்ந்த லைபா ஜபாயர் 17 சனா ஜபாயர் 13 என்ற இரு சகோதரிகள் நேற்று முன்தினம் வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்தனர்.

எல்லைப் பகுதியில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் அந்த இரண்டு மைனர் சிறுமியரையும் பாதுகாப்புப் படையினர் தடுப்பு காவலில் வைத்தனர்.

இந்நிலையில் அந்த இரண்டு சிறுமியரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு நேற்று பத்திரமாக திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். இதுகுறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த இரண்டு சிறுமியரும் ‘சாக்கன் தா பாக்’ எல்லைப் பகுதி வழியாக இன்று பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.

மக்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் அந்த சகோதரிகள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த இரு சிறுமியருக்கும் பரிசுகள் மற்றும் இனிப்புகளை வழங்கி ராணுவ வீரர்கள் வழியனுப்பி வைத்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சிறுமி லய்பா சபைர் கூறுகையில், “பூஞ்ச் எல்லைக்குள் நுழைந்ததுமே எங்களை ராணுவ வீரர்கள் பிடித்துவிட்டனர். விசாரணைக்கு பிறகு, நல்ல உணவுகளையும், பாதுகாப்பான தங்குமிடத்தையும் வழங்கினர். இந்திய மக்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள்” என்றார்.

Leave your comments here...