இந்தியா மொபைல் மாநாடு 2020 : நாளை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.!

இந்தியா

இந்தியா மொபைல் மாநாடு 2020 : நாளை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.!

இந்தியா மொபைல் மாநாடு 2020 : நாளை உரையாற்றுகிறார்  பிரதமர் மோடி.!

இந்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையும், இந்திய செல்போன் நிறுவனங்கள் சங்கமும் இணைந்து இந்தியா மொபைல் மாநாடு 2020-ஐ நடத்துகின்றன.

இந்த மாநாடு 2020, டிசம்பர் 8 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும். இதில் பிரதமர் மோடி, நாளை (டிசம்பர் 8, 2020) காலை 10:45 மணிக்கு இந்தியா மொபைல் மாநாடு 2020-ல் காணொலி வாயிலாக துவக்க உரை ஆற்றுவார்.

இந்தியா மொபைல் மாநாடு 2020: “உள்ளடக்கிய புத்தாக்கம் – திறன்மிகுந்ததும், பாதுகாப்பானதும், நிலையானதுமானது” என்பது இந்தியா மொபைல் மாநாடு 2020-ன் கருப்பொருளாகும். பிரதமரின் தொலைநோக்கான ‘தற்சார்பு இந்தியா’, ‘டிஜிட்டல் உள்ளடக்கம்’, ‘நீடித்த மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் புதுமை’ ஆகியவற்றை ஊக்குவிப்பது இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

அந்நிய, உள்நாட்டு முதலீடுகளை அதிகரிப்பது, தொலைத்தொடர்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சி, மேம்பாடுகளை ஊக்குவிப்பது ஆகியவற்றையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

பல்வேறு அமைச்சகங்களின் பிரதிநிதிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலைவர்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் தலைவர்கள், ஐந்தாவது தலைமுறை அலைக்கற்றை, செயற்கை நுண்ணறிவு, பொருட்களை இணையத்துடன் இணைக்கும் தொழில்நுட்பம், தரவு பகுப்பாய்வு, க்ளவுட் மற்றும் எட்ஜ் கம்ப்யூட்டிங், பிளாக்செயின், சூப்பர் பாதுகாப்பு, ஸ்மார்ட் நகரங்கள், தானியங்கி உள்ளிட்ட துறைகளின் வல்லுநர்கள் ஆகியோர் இந்தியா மொபைல் மாநாடு 2020-ல் கலந்து கொள்வார்கள்

Leave your comments here...