ஜம்மு – காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – பதிலடி கொடுத்த இந்திய ராணுவ வீரர்கள்

இந்தியா

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – பதிலடி கொடுத்த இந்திய ராணுவ வீரர்கள்

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – பதிலடி கொடுத்த  இந்திய ராணுவ வீரர்கள்

ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல்கள் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வழங்கமாக வைத்துள்ளது.

பூஞ்ச் மற்றும் கதுவா மாவட்டங்களில் அமைந்துள்ள எல்லையோர கிராமங்கள் மற்றும் ராணுவ எல்லைச் சாவடிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று காலை தாக்குதல் நடத்தியது. சிறியவகை பீரங்கிகளை உபயோகித்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அந்த தாக்குதலுக்கு நம் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்தனர்.

நம் ராணுவத்தினரின் பதில் தாக்குதலை சமாளிக்க முடியாத பாக். ராணுவத்தினர் தாக்குதலை நிறுத்தினர். இதன்பின் மாலையில் பூஞ்ச் மாவட்டத்தின் காஸ்பா மற்றும் கிர்னி செக்டார்களின் உள்ள ராணுவ சாவடிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது.அதற்கும் நம் ராணுவத்தினர் சரியான பதிலடி கொடுத்தனர். இருதரப்பிற்கும் இடையில் நடந்த அந்த சண்டைகளில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதற்கிடையே ஸ்ரீநகரில் உள்ள ராணுவ முகாமில் யோகேஷ் குமார் என்ற சி.ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகிலுள்ள
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave your comments here...