சென்னை விமான நிலையத்தில் ரூ 81.4 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் ; ஒருவர் கைது.!

தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் ரூ 81.4 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் ; ஒருவர் கைது.!

சென்னை விமான நிலையத்தில் ரூ 81.4 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் ; ஒருவர் கைது.!

சென்னையை சேர்ந்த ஜாகிர் உசேன், 40, என்பவர், இண்டிகோ விமானம் மூலம் சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த நிலையில், வெளிநாட்டு பணத்தை அனுமதியின்றி அவர் எடுத்துச் செல்வதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து புறப்பாடு முனையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவரது உடைமைகளை சோதனையிட்டபோது, அவரது கைப்பையில் இருந்து ரூபாய் 6.6 லட்சம் மதிப்புடைய 7,500 யூரோக்கள் கண்டறியப்பட்டு, சுங்க சட்டத்தின் கீழ் அவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், துபாயில் இருந்து சென்னை வந்த விமானங்களில் ஐந்து தங்கக் கடத்தல் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஃபிளை துபாய் விமானத்தில் சென்னை வந்திறங்கிய திருச்சிராப்பள்ளியை சேர்ந்த முகமது இத்ரீஸ், 25, ராமேஸ்வரத்தை சேர்ந்த முகமது இர்பான், 36, மற்றும் லியாகத் அலி, 36, ஆகியோர் சந்தேகத்தின் அடிப்படையில் வெளியே செல்லும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை சோதனையிட்டபோது உடலுக்குள் மறைத்து வைத்து ஏழு பொட்டலங்களில் தங்கப் பசையை கடத்தி வந்தது தெரியவந்தது. 1.33 கிலோ எடையுடைய ரூபாய் 67.1 லட்சம் மதிப்புடைய 24 கேரட் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.


ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சென்னை வந்திறங்கிய சென்னையை சேர்ந்த அபுபக்கர் சித்திக், 21, மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த சையது அபுதாஹிர், 21, ஆகியோர் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை சோதனை செய்து பார்த்தபோது ஜீன்ஸ் கால் சட்டைப்பைக்குள் தங்க பசையை மறைத்து வைத்து தைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.

அவர்களிடமிருந்து 285 கிராம் எடையுடைய ரூபாய் 14.34 லட்சம் மதிப்புடைய 24 கேரட் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.மொத்தம் ரூ 81.4 லட்சம் மதிப்புள்ள 1.62 கிலோ தங்கம், ரூ 6.6 லட்சம் மதிப்புள்ள 7,500 யூரோக்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave your comments here...