மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் 5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு.!

இந்தியா

மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் 5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு.!

மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால்  5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு.!

மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய பங்காற்றிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சஜித் மிர் பிடித்து கொடுப்பவர்கள் அல்லது தகவல் அளிப்பவர்களுக்கு 5 மில்லியன் டாலர் பரிசு அளிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க நீதித்துறை திட்டத்திற்கான அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய உறுப்பினர் சஜித் மிர். இந்தியாவின், மும்பையில், கடந்த 2008 நவ., மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சம்பவத்தில் முக்கிய குற்றவாளி. இவனை கைது செய்ய உதவினாலோ அல்லது எந்த நாட்டிலாவது தண்டனை கிடைக்க உதவினாலோ 5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர தலைநகர் மும்பையின் சில பகுதிகளில், 2008 நவம்பர், 26ல், பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டன. அதில், 28 வெளிநாட்டினர் உட்பட, 166 பேர் உயிரிழந்தனர். அப்போது, லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதிகள் ஒன்பது பேர், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாபிற்கு, இந்தியாவில் துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த தாக்குதல் நடந்து, நேற்று முன்தினத்துடன், 12 ஆண்டுகள் நிறைவடைந்தன.

Leave your comments here...