திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 10 நாட்களுக்கு சொர்க்க வாசலை திறந்து வைக்க, தேவஸ்தானம் முடிவு .!

ஆன்மிகம்

திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 10 நாட்களுக்கு சொர்க்க வாசலை திறந்து வைக்க, தேவஸ்தானம் முடிவு .!

திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 10 நாட்களுக்கு சொர்க்க வாசலை திறந்து வைக்க, தேவஸ்தானம் முடிவு .!

திருப்பதி, திருமலை அன்னமய பவனில், நேற்று மாலை அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில், குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில், பல முக்கிய விஷயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

கூட்ட நிறைவுக்கு பின், சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமலை தேவஸ்தான வரலாற்றில் முதன் முறையாக, வைகுண்ட ஏகாதசியின் போது, 10 நாட்கள் சொர்க்க வாசலை திறந்து வைக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்காக மடாதிபதிகள், பீடாதிபதிகளுடன் கூடிய கமிட்டி ஏற்படுத்தப்பட்டு, அதில் முடிவு செய்யப்பட்டு, அறங்காவலர்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, வரும், 25 முதல், தொடர்ந்து, 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்து வைக்கப்பட உள்ளது.

திருமலை தேவஸ்தானத்திடம் உள்ள அசையாத சொத்துக்கள் தொடர்பாக, வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய தேவஸ்தானத்தின் சொத்துக்கள் விற்கப்படுவதை தடுக்க, தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதுவரை தேவஸ்தானத்திடம், 1,128 சொத்துகள் உள்ளன; 8088.89 ஏக்கர் நிலம் உள்ளது.

தமிழகத்தில், உளூந்துார் பேட்டையில், அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு, 4 ஏக்கர் நிலம் மற்றும் அதில் ஏழுமலையான் கோவில் கட்ட, 10 கோடி ரூபாய் நிதி வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார். அதனால் அங்கு ஏழுமலையான் கோவில் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில், டிச., 1ம் தேதி முதல், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Leave your comments here...