லாரிகளுக்கு உலகத் தரத்திலான பிஎஸ்-6 டீசல் இன்ஜின் ஆயில்: இந்தியன் ஆயில் அறிமுகம்

இந்தியா

லாரிகளுக்கு உலகத் தரத்திலான பிஎஸ்-6 டீசல் இன்ஜின் ஆயில்: இந்தியன் ஆயில் அறிமுகம்

லாரிகளுக்கு உலகத் தரத்திலான பிஎஸ்-6 டீசல் இன்ஜின் ஆயில்: இந்தியன் ஆயில் அறிமுகம்

வாடிக்கையாளருக்கு புதுமையான தயாரிப்புகளை வழங்கும் நோக்கில், இந்தியன் ஆயில் நிறுவனம் சர்வோ பிரைட் என்எக்ஸ்டி ரக இன்ஜின் ஆயில்களை அறிமுகம் செய்துள்ளது. இவை அடுத்த தலைமுறை வாகனங்களுக்கான பிஎஸ்-6 டீசல் இன்ஜின் ஆயில்கள்.

சர்வோ பிரைட் என்எக்ஸ்டி இன்ஜின் ஆயில்கள், புதிய இன்ஜினின் -ஏபிஐ சிகே4 தொழில்நுட்பத்துக்கும், இதற்கு முந்தைய டீசல் இன்ஜின்களுக்கும் இணக்கமாக இருக்கும். இந்த இன்ஜின் ஆயில்கள், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இன்ஜின் சிறப்பாக செயல்பட்டு நீண்ட தூர பயணத்தில் 2 சதவீதம் வரை எரிபொருளை மிச்சப்படுத்தும். இந்த சர்வோ பிரைடு என்எக்ஸ்டி இன்ஜின் ஆயில்கள் 10டபிள்யூ30, 10டபிள்யூ40, 15டபிள்யூ40 என்ற 3 ரகங்களில் வழங்கப்படுகிறது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்(லூப்ஸ்) திரு சுமிமல் மொந்தல் கூறுகையில், ‘‘இந்த இன்ஜின் ஆயில்கள் லாரிகளுக்காக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. பிஎஸ்-6 மாசு கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு உட்பட்டு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் இந்த இன்ஜின் ஆயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் மற்றும் நிலைப்புத்தன்மை ஆகியவை மீதான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் உறுதியையும் கொள்கையையும் பறை சாற்றும் விதத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த இன்ஜின் ஆயில்களை அறிமுகம் செய்கிறோம்’ என்றார்.ஆயில் விற்பனையில் முன்னணியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனம், தனது சூப்பர் பிரான்ட் சர்வோ மூலம் உலகத்தரத்திலான ஆயில்களை வழங்குகிறது.

Leave your comments here...