சென்னை விமான நிலையத்தில் 1.4 கிலோ தங்கம் பறிமுதல்.!

தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் 1.4 கிலோ தங்கம் பறிமுதல்.!

சென்னை விமான நிலையத்தில் 1.4 கிலோ தங்கம் பறிமுதல்.!

சென்னை விமான நிலையத்தில், பயணிகள் கடத்தி வந்த 1.4 கிலோ தங்கத்தை, சுங்கத்துறையினர் இன்று பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து சென்னை வரும் இன்டிகோ விமானத்தில் பெண் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக, சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள், இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த உமாகொலுசு பீவி, மகாரிபா பீவி, மதுரையைச் சேர்ந்த குணசுந்தரி ஆகிய பெண் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.பசை வடிவிலான தங்கம் 11 பாக்கெட்டுகளை இவர்கள் தங்கள் உடையில் மறைத்து வைத்திருந்தனர். அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றில் 604 கிராம் அளவுக்கு சுத்த தங்கம் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.31.41 லட்சம்.மகாரிபா பீவி என்பவர் மீது ஏற்கனவே, கடத்தல் குற்றச்சாட்டு உள்ளதால், அவர் கைது செய்யப்பட்டார்.விமானத்திலும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அந்த விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில் பயணி இருக்கை ஒன்றின் கீழ், துணிப்பை ஒன்று மீட்கப்பட்டது.


அதில் 802 கிராம் எடையில் 5 தங்க துண்டுகள் டேப் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.41.71 லட்சம். இந்தப் பையை யாரும் உரிமை கோரவில்லை.மொத்தம் 1.4 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் இன்று பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.73.12 லட்சம் என சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...