உலகின் மருந்தகமாக, இந்திய மருந்தியல் தொழில், தொடர்ந்து முக்கிய பங்காற்றும் – சதானந்த கவுடா

இந்தியா

உலகின் மருந்தகமாக, இந்திய மருந்தியல் தொழில், தொடர்ந்து முக்கிய பங்காற்றும் – சதானந்த கவுடா

உலகின் மருந்தகமாக, இந்திய மருந்தியல் தொழில், தொடர்ந்து முக்கிய பங்காற்றும் – சதானந்த கவுடா

உலகின் மருந்தகமாக, இந்திய மருந்தியல் தொழில், தொடர்ந்து முக்கிய பங்காற்றும் என சர்வதேச மருந்தாளுநர் இணைய கருத்தரங்கில் மத்திய ரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

தேசிய மருந்தியல் வாரத்தை முன்னிட்டு சர்வதேச மருந்தாளுநர் இணைய கருத்தரங்கு நவம்பர் 21ம் தேதி நடந்தது. இதில் மத்திய ரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சர் சதானந்த கவுடா கலந்து கொள்ள முடியாததால், அவரது உரையை, ஆர்.ஆர் மருந்தியல் கல்லூரி முதல்வர் டாக்டர் நாரயணசாமி வாசித்தார். அதில் திரு சதானந்த கவுடா கூறியதாவது:

கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் முன்கள மருந்தாளுநர்கள் முக்கிய பங்காற்றினர். உலகத்துக்கான தடுப்பூசி மற்றும் உயர் தர மருந்து தயாரிக்கும் சந்தர்ப்பங்களில் மருந்தியல் வல்லுநர்கள் எப்போதுமே உயர்ந்துள்ளனர். வரும் நாட்களில், இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி தயாராக உள்ளது. இந்தியாவிலும் மருந்துத் தொழில் மற்றும் தொழில்துறையை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மருந்து மற்றும் ஊட்டச்சத்து துறைக்கு மென்பொருள் வசதிகளுடன் தொழில் பூங்கா உள்ளிட்ட வசதிகளை வழங்குவதில் அரசு முனைப்புடன் உள்ளது.

உலகின் மருந்தகமாக, இந்திய மருந்தியல் தொழில் தொடர்ந்து முக்கிய பங்காற்றும். மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களில் புதுமைகளை ஊக்குவிக்கிறோம். மருந்தியல் துறையை மேம்படுத்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதிகள் மற்றும் இதர திட்டங்களில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...