மக்களுடனான தொடர்பை காங்கிரஸ் நிர்வாகிகள் இழந்துவிட்டனர் – காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கவலை

அரசியல்

மக்களுடனான தொடர்பை காங்கிரஸ் நிர்வாகிகள் இழந்துவிட்டனர் – காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கவலை

மக்களுடனான தொடர்பை காங்கிரஸ் நிர்வாகிகள் இழந்துவிட்டனர் – காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கவலை

காங்கிரஸ் கட்சியின் அமைப்பு சிதைந்து போயுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் திரு. குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். 5 ஸ்டார் கலாச்சாரம் மூலம் தேர்தல்களில் வெற்றி பெற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி:- பீஹார் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தோல்வி குறித்து கவலைப்படுகிறோம். தோல்விக்கு தலைமையை குறைசொல்லவில்லை. மக்களுடனான தொடர்பை கட்சி நிர்வாகிகள் இழந்துவிட்டனர். கட்சி சார்பில் வாய்ப்பு அளிக்கப்படும் ஒருவர் முதலில் 5 நட்சத்திர ஓட்டலில் தான் தங்குகிறார்.

சாலை மோசமாக இருந்தால், அந்த வழியாக கூட செல்ல முடியாது. 5 நட்சத்திர கலாசாரத்தை ஒழிக்கும் வரையில், நம்மால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. கட்சி நிர்வாகிகள் முதலில் தங்களது பொறுப்புகளை உணர்ந்து கொள்ள வேண்டும். கட்சியில் பொறுப்பு கொடுக்கப்பட்ட உடன், அதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.

கடந்த 72 ஆண்டுகளில், தற்போது காங்கிரஸ் மிகவும் பின்னோக்கி ய நிலையில் உள்ளது. கடந்த இரண்டு முறை, லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட காங்கிரசால் பெற முடிய வில்லை. ஆனால், நாங்கள் எதிர்பார்க்காத வகையில் லடாக்கில் நடந்த கவுன்சில் தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். கட்சி நிர்வாகிகள் முதலில் தங்களது பொறுப்புகளை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மட்டத்திலும், நமது செயல்படும் முறையை மாற்றாதவரை, கட்சியில் எந்த மாற்றமும் ஏற்படாது.

கட்சி தொண்டர்களுக்கு வாய்ப்புகள் தரப்பட வேண்டும். கட்சியில் பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும். கொரோனா காலத்தில் சோனியா குடும்பத்தினர் எதுவும் செய்ய முடியாது. இதனால், அவர்களுக்கு நற்சான்றிதழ் அளிக்கலாம். எங்களது கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. எங்களின் பெரும்பாலான கோரிக்கைகளை, தலைமை ஏற்று கொண்டது. தேசிய அளவில் மாற்றாக இருக்கவும், கட்சிக்கு புத்துயிர் அளிக்கவும் கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும்.

காங்கிரஸின் அமைப்பு சிதைந்து போயுள்ளதாகவும், அதனை மறு உருவாக்கம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். கட்சிப் பதவிகளுக்கு உட்கட்சி தேர்தல் நடத்துவது அவசியம் என்றும் திரு.குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார்.

Leave your comments here...