பாஜகவை வலுப்படுத்த தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 120 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜே.பி.நட்டா.!

அரசியல்

பாஜகவை வலுப்படுத்த தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 120 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜே.பி.நட்டா.!

பாஜகவை வலுப்படுத்த தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 120 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜே.பி.நட்டா.!

கடந்த பாராளுமன்ற தேர்தல், கடந்த ஆண்டு நடந்தது. அடுத்த பாராளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடக்கிறது. அதை குறிவைத்து பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இப்போதே நாடுதழுவிய சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா மற்றும் அசாம் மாநிலங்களுக்கு, அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக.,வுடன் கூட்டணி தொடரும் என அறிவித்தார். இதனையடுத்து தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து பா.ஜனதா பொதுச்செயலாளர் அருண்சிங் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 2024ம் ஆண்டு பார்லி., தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பாஜகவை பலப்படுத்த, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நாடு முழுவதும் 120 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் எனத் தெரிவித்தார். மேலும், டிசம்பர் முதல் வாரம், உத்தரகண்டில் தனது பயணத்தை நட்டா தொடங்குவார் எனவும், தேர்தல் வெற்றிக்கான வியூகம் குறித்து அந்தந்த மாநில பாஜக நிர்வாகிகளுடன், நட்டா ஆலோசனை நடத்துவார் எனவும் அவர் கூறினார்.

Leave your comments here...