டோக்லாம் பகுதியை நெருங்க சாலை அமைத்து எல்லைக்குள் ஊடுருவி சீனா – செயற்கைகோள் புகைப்படத்தால் அம்பலம்

இந்தியா

டோக்லாம் பகுதியை நெருங்க சாலை அமைத்து எல்லைக்குள் ஊடுருவி சீனா – செயற்கைகோள் புகைப்படத்தால் அம்பலம்

டோக்லாம் பகுதியை நெருங்க சாலை அமைத்து எல்லைக்குள் ஊடுருவி சீனா – செயற்கைகோள் புகைப்படத்தால் அம்பலம்

இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் உள்ள டோக்லாமில், அத்துமீறி சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டது; இது, இரு நாட்டு வீரர்கள் இடையே மோதலாக வெடித்தது.பிரதமர் மோடி, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் இடையே நடந்த பேச்சின் இறுதியில், டோக்லாம் விவகாரத்தில் சுமுக தீர்வு எட்டப்பட்டது.

இந்நிலையில், இந்தியா — சீனா எல்லையில் அமைந்துள்ள, அண்டை நாடான பூடானில், 2 கி.மீ., துாரத்தை ஆக்கிரமித்து, பங்டா என்ற கிராமத்தை, சீனா உருவாக்கியுள்ளது.இதை, சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகம் உறுதி செய்துள்ளது. மேலும், இது தொடர்பான செயற்கைகோள் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பூடானுக்குள், 9 கி.மீ., துாரத்திற்கு, சீன படையினர் சாலை அமைத்துள்ளது தெரியவந்துள்ளது. இது, டோக்லாம் பகுதியை சீன படையினர் எளிதில் நெருங்க வழி செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.கிழக்கு லடாக்கில், எல்லை அருகே, சீன ராணுவம், சுரங்கப் பாதைகளை உருவாக்கியுள்ளது. இவற்றில், ராணுவத்தினர் எதிரிகளின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள, கான்கிரீட் பைப்புகளுடன் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராணுவத்தினர், கடும் பனிப்பொழிவின் தாக்கத்தை சமாளிக்க, சுரங்கப் பாதையில், வெப்பமயமக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானுடன் நடைபெற்ற இரண்டாவது போரில், சீனா, இதுபோன்ற குகை தாக்குதல் மற்றும் தற்காப்பு திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது. அதுபோல, இந்தியாவும், குகை வழி தற்காப்பு மற்றும் தாக்குதல் திட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதை, சீனா நிச்சயம் எதிர்பார்த்திருக்காது.

Leave your comments here...