2 நாட்கள் நடைபெறும் ஜி-20 தலைவர்களின் 15-வது உச்சி மாநாடு – பிரதமர் மோடி பங்கேற்கிறார்

இந்தியாஉலகம்

2 நாட்கள் நடைபெறும் ஜி-20 தலைவர்களின் 15-வது உச்சி மாநாடு – பிரதமர் மோடி பங்கேற்கிறார்

2 நாட்கள் நடைபெறும் ஜி-20 தலைவர்களின் 15-வது உச்சி மாநாடு – பிரதமர் மோடி பங்கேற்கிறார்

சவுதி அரேபியா பேரரசின் இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரான மேன்மை பொருந்திய அரசர் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சவுத் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஜி20 நாடுகளின் 15வது உச்சி மாநாட்டில் பங்கேற்பார்.

21- 22 நவம்பர் 2020 தேதிகளில், சவுதி அரேபியா அரசு தலைமையில் நடைபெறவுள்ள இந்த மெய்நிகர் மாநாட்டின் கருப்பொருள் “இருபத்தோராம் நூற்றாண்டில் அனைவருக்கும் உள்ள வாய்ப்புகளை உணர்தல்” என்பதாகும்.

நடைபெறவுள்ள இந்த உச்சி மாநாடு, இந்த ஆண்டு, ஜி-20 தலைவர்களின் இரண்டாவது சந்திப்பாகும். பிரதமருக்கும், சவுதி அரேபிய பட்டத்து இளவரசருக்குமிடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலையடுத்து கடந்த மார்ச் 2020ல், ஜி-20 தலைவர்களுக்கான அசாதாரண உச்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் ஜி-20 நாடுகள் கோவிட் 19 பெருந்தொற்று பரவாமல் தடுக்கவும், அது தொடர்பாக, உலக அளவிலான, ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கவும், உரிய காலத்தில் தலைவர்களிடையே புரிந்துணர்வு ஏற்பட்டது.

கோவிட் 19 பெருந்தொற்றிலிருந்து மீண்டெழ, தொடர்ந்து உறுதியுடன் பாடுபடுவது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து வரவிருக்கும் ஜி-20 உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படும். இந்த ஜி20 உச்சி மாநாட்டின் போது பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கான தயார் நிலை; வேலைவாய்ப்புகளை மீண்டும் ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்தும் தலைவர்கள் விவாதிப்பார்கள். அனைவரையும் உள்ளடக்கிய, தொடர்ந்த, உறுதியான எதிர்காலத்தை உருவாக்குவது குறித்த தங்களது தொலைநோக்கு பார்வையையும் தலைவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.

ஜி-20 அமைப்பிற்கு 1 டிசம்பர் 2020 அன்று இத்தாலி தலைமை பொறுப்பேற்கும் போது, ஜி 20 டிராய்கா எனப்படும் ஜி-20 அமைப்பின் மூன்று நாட்டு கூட்டணியில் இந்தியாவும், சவுதி அரேபியாவும் இடம் பெறவுள்ளன.

Leave your comments here...