பழுது பார்க்கும் கடை வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம கும்பல்.!

சமூக நலன்

பழுது பார்க்கும் கடை வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம கும்பல்.!

பழுது பார்க்கும் கடை வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம கும்பல்.!

மதுரை வண்டியூர் பகுதியில் பழனி என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக அதே பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு கடை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.உடனடியாக பழனிக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த பழனி பொதுமக்கள் உதவியுடன் மீதமுள்ள இருசக்கர வாகனங்களை மீட்டார்.

இதுகுறித்து , தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இருப்பினும் ஐந்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் முழுமையாக எரிந்து நாசமானது, மேலும் பழனி அளித்த புகாரின் அடிப்படையில் , வழக்குப்பதிவு செய்த அண்ணாநகர் காவல் துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் மதுரையில் கடந்த இரண்டு மாதங்களில் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் இதுபோன்று மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...