பணியாளர் தேர்வாணையத்தின் ஆட்சேர்ப்பு அறிவிப்பு : விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 15.!

இந்தியா

பணியாளர் தேர்வாணையத்தின் ஆட்சேர்ப்பு அறிவிப்பு : விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 15.!

பணியாளர் தேர்வாணையத்தின் ஆட்சேர்ப்பு அறிவிப்பு : விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 15.!

ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) நிலையிலான தேர்வு, 2020″ மூலம் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை இம்மாதம் ஆறாம் தேதியன்று பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது.

பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, கட்டணம், இணையம் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது உள்ளிட்ட தகவல்கள் விரிவான முறையில் பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் (https://ssc.nic.in/) உள்ள ஆட்சேர்ப்பு அறிவிப்பில் உள்ளது.

ssc.nic.in என்னும் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2020 டிசம்பர் 15 ஆகும். இணையம் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 2020 டிசம்பர் 17 ஆகும்.

மூன்று மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட தங்களது வண்ண புகைப்படத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். புகைப்படம் எடுத்த தேதி புகைப்படத்தின் மீது தெளிவாக அச்சிடப்பட்டு இருக்க வேண்டும். மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் காரணமாக இந்த விதிகள் இணைக்கப்பட்டுள்ளன. தேதி அச்சிடப்படாத புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

பணியாளர் தேர்வாணயத்தின் தெற்கு மண்டலத்தில், 2021 ஏப்ரல் 12 முதல் 2021 ஏப்ரல் 27 வரை கீழ்க்கண்ட நகரங்களில் முதல்நிலை கணினி சார்ந்த தேர்வு நடத்தப்படும்: தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் வேலூர், புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசத்தில் சிராலா, குண்டூர், காக்கிநாடா, கர்னூல், நெல்லூர், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகரம், தெலுங்கானாவில் ஹைதராபாத், கரீம் நகர் மற்றும் வாரங்கல்.மேற்கண்ட தகவல்களை, சென்னை பணியாளர் தேர்வாணையத்தின் (தென் மண்டலம்), இணை செயலாளரும், மண்டல இயக்குநருமான திரு கே நாகராஜா செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...