பாஜக மூத்த தலைவர் அத்வானி பிறந்த நாள்: பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

அரசியல்இந்தியா

பாஜக மூத்த தலைவர் அத்வானி பிறந்த நாள்: பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

பாஜக மூத்த தலைவர் அத்வானி பிறந்த நாள்: பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று தனது 93-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.


பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தி:- நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த மரியாதைக்குரிய அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், லட்சகணக்கான பா.ஜ., தொண்டர்களுக்கு முன்மாதிரியாக உள்ளார். நீண்ட நாட்கள், ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கத்தில் உள்துறை மந்திரியும் துணை பிரதமராக இருந்த அத்வானி, நாட்டின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.


அத்வானி பிறந்த நாளை முன்னிட்டு அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற பிரதமர் மோடி, அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், அத்வானியின் காலில் விழுந்து ஆசியும் பெற்றார். அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தலைவர் நட்டா ஆகியோர் உடனிருந்தனர்.


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டுவிட்டரில் வாழ்த்து செய்தி:- மரியாதைக்குரிய அத்வானி அவர்கள் தனது கடினமான மற்றும் தன்னலமில்லாத உழைப்பு மூலம், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டதுடன், பா.ஜ.,வின் தேசியவாத கொள்கைகளை, நாடு முழுவதும் விரிவுபடுத்தினார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதுடன், நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழ கடவுளை வேண்டி கொள்கிறேன்

Leave your comments here...