நாடு முழுவதும் 7 லட்சம் பேருக்கு இ-சஞ்சீவினி டெலிமெடிசின் சேவை – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இந்தியா

நாடு முழுவதும் 7 லட்சம் பேருக்கு இ-சஞ்சீவினி டெலிமெடிசின் சேவை – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

நாடு முழுவதும் 7 லட்சம் பேருக்கு இ-சஞ்சீவினி டெலிமெடிசின் சேவை – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

நாடு முழுவதும் இதுவரை ஏழு லட்சம் பேருக்கு இ-சஞ்சீவினி டெலிமெடிசன் சேவை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் இ-சஞ்சீவினி என்ற தேசிய டெலிமெடிசன் சேவை தொடங்கப்பட்டது. இன்று வரை ஏழு லட்சம் பேருக்கு இந்த சேவை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த் 11 நாட்களில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு சேவை அளிக்கப்பட்டுள்ளது.


இந்த தனித்தன்மை வாய்ந்த டிஜிட்டல் முறையில் இணைய வாயிலாக வெளிநோயாளிகள் சிகிச்சை ஆலோசனை பெறுவது சீராக புகழ்பெற்று வருகிறது. தினமும் 10,000-த்துக்கும் மேற்பட்டோருக்கு இ-சஞ்சீவினி வழியே ஆலோசனை வழங்கப்படுகிறது. நாட்டில் அமைக்கப்பட்ட வெளிநோயாளிகள் சேவையில் பெரும் அமைப்பாக இது வடிவம்பெற்று வருகிறது.

இ-சஞ்சீவினி வழியே இரண்டு வகையான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. பொது மருத்துவர்-மருத்துவ சிறப்பு நிபுணருக்கு இடையே நடைபெறும் ஆலோசனை மருத்துவரோடு மருத்துவர் ஆலோசனை என்ற பிரிவில் வருகிறது. நோயாளிகள்-மருத்துவர் இடையேயான ஆலோசனை இரண்டாவது பிரிவில் வருகிறது.

நாடு முழுவதும் இதுவரை 700001 பேருக்கு இ-சஞ்சீவினி வழியே ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் 2,31,391 பேருக்கு இ-சஞ்சீவினி முறையில் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Leave your comments here...