இந்தியா
காஷ்மீரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர் : அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை..!
- October 20, 2020
- jananesan
- : 643
- Kashmir
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஹக்ரிபோரா (கக்கபோரா) பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கூட்டாக இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், கூட்டு படையை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்த தகவலை காஷ்மீர் மண்டல போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.
Leave your comments here...