அரசியல்
மதுரையில் தரமற்ற சாலை : பாஜகவினர் மறியல்.!
- October 20, 2020
- jananesan
- : 717
- BJP
மதுரை மில்கேட் பிரதான சாலையில் சீர் அமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் நேற்று இரண்டு கிலோமீட்டர் தூரம் தார் சாலைகள் போடப்பட்ட நிலையில், தார் சாலைகள் தரம் இல்லாத காரணத்தினால் சாலைகள் இன்று சாலைகள் முழுதும் சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதி பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் சுமார் ஒரு மணி நேரத்தில் நடைபெற்றது பின்பு போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சாலைகளை உடனடியாக சரி செய்வதாக வாக்குறுதி அளித்து அதன் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டனர்.
தற்போது இப்பகுதியில் மீண்டும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
Leave your comments here...