திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில் உண்டியலில், பக்தர்கள் 5 லட்சம் காணிக்கை.!

ஆன்மிகம்

திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில் உண்டியலில், பக்தர்கள் 5 லட்சம் காணிக்கை.!

திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில் உண்டியலில், பக்தர்கள் 5 லட்சம் காணிக்கை.!

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவிலுக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

கடந்த சனிக்கிழமை புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மறு நாள் விடுமுறை என்பதால், ஞாயிறு கிழமையும் பக்தர்கள் கூட்டம் ஓரளவு இருந்தது.

கோவிலுக்கு வந்த பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய பணம் எண்ணப்பட்டது. இரண்டு நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக 5 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave your comments here...