திருவில்லிபுத்தூர் கோவில் உண்டியலில் திருட முயன்ற 2 பேர் போலீசில் சிக்கினர் : 3 வீடுகளில் திருடியது அம்பலமானது.!

சமூக நலன்தமிழகம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது புகழ் பெற்ற மடவார் வளாகம் எனப்படும் வைத்தியநாத சுவாமி திருக்கோவில்.

இந்த கோவிலில் இரண்டு வாரங்களுக்கு முன்பு உண்டியலை உடைத்து திருட முயற்சி நடந்தது. காவலாளி சத்தம் போட்டதால் மர்ம ஆசாமிகள் தப்பியோடிவிட்டனர். மேலும் கோவில் அருகில் உள்ள மஞ்சப்பூ தெருவில் 3 வீடுகளிலும் திருட்டு முயற்சி நடந்துள்ளது.

இதில் ஒரு வீட்டில் 3 செல் போன்கள் திருட்டு போனது. இது குறித்து கோவில் ஊழியர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் திருவில்லிபுத்தூர் நகர் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் அந்தப்பகுதியில் இருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

போலீசார் தேடுதல் வேட்டையில் திருடர்கள் சிக்கினர். விழுப்புரத்தை சேர்ந்த முருகன், குற்றாலத்தை சேர்ந்த சங்கர் இரண்டு பேரும் சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. கோவிலில் திருட முயன்ற, வீடுகளில் திருடிய முருகன் மற்றும் சங்கரை போலீசார் கைது செய்தனர்.

Leave your comments here...