மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், புரட்டாசி மாத மலைமேல் குமரர்(வேல் எடுக்கும்) திருவிழா மற்றும் நவராத்திரி உற்சவ திருவிழா ரத்து..!
- October 11, 2020
- jananesan
- : 692
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், புரட்டாசி மாத மலைமேல் குமரர்(வேல் எடுக்கும்) திருவிழா மற்றும் நவராத்திரி உற்சவ திருவிழா கொரோனா வைரஸ் காரணமாக ரத்து
ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை மலைமேல் வேல்எடுக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் வீரியம் அதிகரிப்பதன் காரணமாகவும், பொதுமக்களின் கூட்டத்தினை தவிர்க்கும் வகையிலும் மலைமேல் குமாரர் திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் நவராத்திரி உற்சவ விழாவும் வருடா வருடம் அக்டோபர் மாதம், பத்து நாட்கள் விமர்சியாக நடைபெற்று வந்த நிலையில், அரசின் உத்தரவின் பேரில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக அக்டோபர் 17ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறவிருந்த நவராத்திரி கோவர்தனம்பிகை உற்சவ திருவிழா, பசுமலையில் நடைபெறும் அம்பு போடும் விழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து கோவிலுக்குள் சன்னதியில் நடைபெறும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நிகழ்ச்சிகளில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட தேதிகளில் மக்கள் கோவிலில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Leave your comments here...