காவல்துறை வர்த்தக சங்கம் இணைந்து கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு.!

தமிழகம்

காவல்துறை வர்த்தக சங்கம் இணைந்து கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு.!

காவல்துறை வர்த்தக சங்கம் இணைந்து கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு.!

புதுக்கோட்டை ; கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு டிஎஸ்பி ஜெயசீலன் தலைமை வகித்தார் வர்த்தக சங்க தலைவர் வரதராஜன் அறந்தை ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்

நிகழ்ச்சியில் அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு முககவசம் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட் காவல் உதவி மையத்தின் முன்பாக ஆவி பிடிக்கும் எந்திரத்தின் மூலம் பயணிகளுக்கு ஆவி பிடிக்கப்பட்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் அறந்தாங்கி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சப் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன், சிவகுமார், இளமாறன, வர்த்தக சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், சலீம். காந்தி நாதன் ,செல்வம் சமூக ஆர்வலர்கள் பசீர் அலி பகதூர்ஷா ,கிரீன் முகமது ,முபாரக் பிச்சை முகம்மது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave your comments here...