சிறுமி படுகொலையை கண்டித்து, முடி திறுத்தும் கடைகளை அடைத்து போராட்டம்.!

சமூக நலன்

சிறுமி படுகொலையை கண்டித்து, முடி திறுத்தும் கடைகளை அடைத்து போராட்டம்.!

சிறுமி படுகொலையை கண்டித்து, முடி திறுத்தும் கடைகளை அடைத்து போராட்டம்.!

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில், திண்டுக்கல் மாவட்டம் குரும்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, மருத்துவர் சமூகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கொலை செய்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும், போலீஸ் விசாரணை தாமதமாகும் பட்சத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும், திருவில்லிபுத்தூரில் உள்ள 100 க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் கடைகள் மூடப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave your comments here...