மகாராஷ்டிராவில் விரைவில் பாஜக ஆட்சிக்கு வரும் : 3 ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சி வரிசைக்கு செல்லும் -ஜே.பி.நட்டா உறுதி.!
- October 9, 2020
- jananesan
- : 1306
- ஜே.பி.நட்டா
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாரதீய ஜனதா அதிக தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. தேர்தலுக்கு பிறகு சிவசேனா, பாரதீய ஜனதா இடையே ஏற்பட்ட முதல்-மந்திரி பதவிக்கான போட்டியால் இந்த கூட்டணி பிரிந்தது.
இதைதொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து புதிய கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. பாரதீய ஜனதா எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் பாரதீய ஜனதா கட்சி தலைவர் ஜே.பி.நட்டா காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு பேசினார்.
Addressing Maharashtra BJP office bearers and State Executive Meeting. https://t.co/i3CEZ3MNIA
— Jagat Prakash Nadda (@JPNadda) October 8, 2020
இதில் அவர் கூறியதாவது:- 2019-ம் ஆண்டு மராட்டிய சட்டசபை தேர்தல் பாரதீய ஜனதாவுக்கானது தான். ஆனால் நாம் ஏமாற்றப்பட்டோம். விரைவில் தற்போது ஆட்சியில் இருக்கும் 3 ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சி வரிசைக்கு செல்லும். பாரதீய ஜனதா தனது சொந்த பலத்தில் மாநிலத்தில் ஆட்சி பொறுப்புக்கு வரும். மராட்டிய பாரதீய ஜனதா தொண்டர்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன்.தேவேந்திர பட்னாவிசை மீண்டும் முதல்-மந்திரி இருக்கையில் பார்க்க பலரும் விரும்புகின்றனர். தற்போது நாங்கள் மராட்டியத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக இருக்கிறோம். விரைவில் நாங்கள் ஆளும் கட்சியாக மாறப்போகிறோம் என கூறி உள்ளார்.
Leave your comments here...