இந்திய மாணவர்கள் கல்விக்காக வெளிநாடு போவதை தவிர்க்க ஆக்ஸ்போர்டு, யேல் பல்கலைகளின் கிளைகள் துவங்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியா

இந்திய மாணவர்கள் கல்விக்காக வெளிநாடு போவதை தவிர்க்க ஆக்ஸ்போர்டு, யேல் பல்கலைகளின் கிளைகள் துவங்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி

இந்திய மாணவர்கள் கல்விக்காக வெளிநாடு போவதை தவிர்க்க ஆக்ஸ்போர்டு, யேல் பல்கலைகளின் கிளைகள் துவங்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி

இந்திய மாணவர்கள் கல்விக்காக வெளிநாடு போவதை தவிர்க்க ஆக்ஸ்போர்டு, யேல் பல்கலைகளின் கிளைகள் துவங்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி மேலும் தெரிவித்ததாவது, ‛ இந்திய பல்கலைகளில் பயின்றவர்கள் மைக்ரோ சாப்ஃட், கூகுள் போன்ற நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் உள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டுப் பல்கலைகளின் கிளைகள் இந்தியாவில் துவங்கப்பட்டால் மேலும் திறமைமிக்கவர்களை உருவாக்க முடியும்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைகளில் படிக்கச் செல்கின்றனர். இதனால் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாடுகளுக்கு செல்வதாக கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உலகில் உள்ள பல பல்கலைகள் இந்திய மாணவர்களை துவக்கத்தில் இந்தியாவில் படிக்க அனுமதி வழங்கி உள்ளது. அவ்வாறு படிக்கும் மாணவர்கள் இறுதி ஆண்டினை வெளிநாட்டில் பல்கலையில் படித்து முடிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் வாஷிங்டன் பல்கலை, லண்டன் ஸ்கூல் ஆப் எகானாமிக்ஸ், மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற பல்கலைகள் இந்தியாவில் கிளைகள் ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால், எம்சிகில் பல்கலை, சிட்னி பல்கலை போன்றவை இந்தியாவில் கிளைகள் ஏற்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன.மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க இந்தியாவிலும் பிரசித்தி பெற்ற பல்கலைகளின் கிளைகள் துவங்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave your comments here...