ரூ.2 கோடி வரையிலான கடன் தவணைக்கு வட்டிக்கு வட்டி வசூல் இல்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்.!

இந்தியா

ரூ.2 கோடி வரையிலான கடன் தவணைக்கு வட்டிக்கு வட்டி வசூல் இல்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்.!

ரூ.2 கோடி வரையிலான கடன் தவணைக்கு வட்டிக்கு வட்டி வசூல் இல்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்.!

ரூ.2 கோடி வரையிலான கடன் தவணைக்கு வட்டிக்கு வட்டி வசூல் இல்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது

ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் வாங்கிய தனிநபர் கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், கிரெடிட் கார்ட் மீதான கடன் உள்ளிட்ட அனைத்து கடன் தவணைகளையும் செலுத்துவதற்கு மார்ச் 1 முதல் ஆக., 31 வரை க கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வங்கிகள் வட்டி விதித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சில நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுக்களை நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ்ரெட்டி, எம்.ஆர்.ஷா அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. கடன் தவணை காலத்தில் வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளதாவது: அதில், வீட்டுக் கடன், தனிநபர் கடன், கல்விக் கடன், வாகனக் கடனுக்கான தவணைக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்றும், சிறு, குறு, தொழில் கடன், கிரெட்டில் கார்டில் கடன் பெற்றவர்களுக்கான கடன் தொகையில் வட்டிக்கு வட்டி வசூல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களில் கடன் தவணையை முறையாக செலுத்தியவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும்.

கடன் தவணை சலுகைக் காலத்துக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்ய முடியாது எனக் கூறிய நிலையில் மத்திய அரசின் முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இந்த வழக்கில், மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை எந்தவொரு கடனையும் வாராக்கடனாக அறிவிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...