பிரமோஸ் சூப்பர்சோனிக் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து!

இந்தியா

ஒடிசாவின் பால்சோர் மாவட்டத்தில், மொபைல் லாஞ்சர் மூலம், இன்று காலை 10:30 மணியளவில் இந்த சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டது. டிஆர்டிஓவின் பிஜே-10 திட்டத்தின் கீழ் இந்த சோதனை செய்யப்பட்டது.

இந்த ஏவுகணை சோதனை செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். இந்த ஏவுகணையில் உள்ள ஏர் பிரேம் மற்றும் பூஸ்டர் ஆகியவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவையாகும்.

இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள டிஆர்டிஓ தலைவர் சதீஷ்ரெட்டி, இந்த ஏவுகணையில், வருங்காலங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை சேர்ப்பதற்கு இன்று நடந்த சோதனை உதவும் எனக்கூறியுள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தி:- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பூஸ்டர் மற்றும் ஏர்பிரேமுடன் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி, தன்னிறைவு இந்தியாவிற்கு ஊக்கமளிக்கும் எனக்கூறியுள்ளார்

Leave your comments here...