இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம கோபாலன் காலமானார்.!

தமிழகம்

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம கோபாலன் காலமானார்.!

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம கோபாலன் காலமானார்.!

இந்து முன்னணியின் நிறுவனர் ராமகோபாலன் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போரூர் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். மூச்சுத்திணறல் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில், மருத்துவமனை செய்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்தார். இந்த நிலையில், மீண்டு மூச்சு திணறல் ஏற்பட கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.94 வயதான அவரது உடல்நிலை, மருத்துவ சிகிச்சைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 27 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, சுவாசப்பாதையை சீராக்குவதற்கான சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர். இந்த நிலையில், இன்று, மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

Leave your comments here...