சென்னையில் “என்.ஐ.ஏ” கிளை அலுவலகம் திறக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

தமிழகம்

சென்னையில் “என்.ஐ.ஏ” கிளை அலுவலகம் திறக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

சென்னையில் “என்.ஐ.ஏ” கிளை அலுவலகம் திறக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

சென்னை உட்பட 3 நகரங்களில் என்ஐஏ அமைப்பின் கிளை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை, இம்பால் மற்றும் ராஞ்சி ஆகிய இடங்களில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சமீப காலமாக நாட்டின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இது தொடர்பான வழக்குகளை கையாளும் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் கிளை அலுவலகங்கள் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள ஒன்பது நகரங்களில் இயங்குகின்றன.

இந்நிலையில் சென்னை, இம்பால் மற்றும் ராஞ்சியில் என்.ஐ.ஏ. அமைப்பின் கிளை அலுவலகங்களை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Leave your comments here...