பிரதமர் மோடி பிறந்த நாள் : பாஜகவினர் இனிப்புடன் மாணவர்களுக்கு இந்தி புத்தகம் வழங்கினர்..!

அரசியல்

பிரதமர் மோடி பிறந்த நாள் : பாஜகவினர் இனிப்புடன் மாணவர்களுக்கு இந்தி புத்தகம் வழங்கினர்..!

பிரதமர் மோடி பிறந்த நாள் : பாஜகவினர் இனிப்புடன் மாணவர்களுக்கு இந்தி புத்தகம் வழங்கினர்..!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம், மீனாட்சி நகர், அவனியாபுரம், பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியினர் பிரதமர் மோடி 70வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக கொடியை ஏற்றி கொண்டாடினர்.

இதில் மதுரை மாவட்ட பொறுப்பாளரும் பாஜக மாநிலத் துணைச் செயலாளருமான கதலி நரசிங்கப் பெருமாள் மாணவர்களுக்கு இனிப்புடன் ஹிந்தி புத்தகம் வழங்கி கொண்டாடினார்.மூன்றாவது மொழியான இந்தி தமிழகத்திற்கு அவசியம் தேவை. மாணவர்கள் இந்தி கற்பதன் மூலம் வாழ்க்கைக்கு பெரிதும் உதவும்.

தமிழகத்தில் பல பள்ளிகளில் இந்தி பாட வகுப்புகள் உள்ளது. இதனால் புதிய கல்வி கொள்கையை வரவேற்கிறோம் எனக்கூறி மாணவர்களுக்கு இந்தி புத்தகத்தை வழங்கினார்.

Leave your comments here...