ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆன்லைன் மூலம் தரிசனத்திற்கு அனுமதி.!

ஆன்மிகம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது, தென் திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை. இங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். ஆண்டு தோறும் புரட்டாசி மாத கருட சேவையில் இருக்கும் பெருமாளை தரிசிக்க, புரட்டாசி மாத ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

பக்தர்கள் மற்றும் பொது மக்கள் வசதிக்காக இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்து சுவாமியை தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன் பதிவு செய்தவர்களுக்கு தனி வரிசை வசதி செய்யப்பட்டுள்ளது. காலை 3.30 மணியிலிருந்து, இரவு 7.30 மணி வரை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஆன்லைன் முன் பதிவு செய்தவர்கள், சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் தரிசனம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் www.tnhrce.gov.in ல் தங்களுக்கான ஆன்லைன் டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave your comments here...