அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவராக வேண்டுமா? சென்னையில் செப்டம்பர் 26-ல் நேர்காணல்

தமிழகம்

அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவராக வேண்டுமா? சென்னையில் செப்டம்பர் 26-ல் நேர்காணல்

அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவராக வேண்டுமா? சென்னையில் செப்டம்பர் 26-ல் நேர்காணல்

அஞ்சல் ஆயுள் காப்பீடு / கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களை விற்பனை செய்வதற்காக நேரடி முகவர்களை நியமனம் செய்ய / குழுவில் இணைத்துக் கொள்ள நேரடி நேர்காணல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. பின்வரும் தகுதிகள் கொண்ட, ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் 26. 9. 2020 அன்று காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள தலைமை போஸ்ட் மாஸ்டர் அலுவலகம் அண்ணா சாலை, தலைமை அஞ்சல் அலுவலகம், சென்னை 600 002 என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் நேரடியாகக் கலந்து கொள்ளலாம்.

தகுதிகள்

கல்வித்தகுதி: ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் வசிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தால் போதுமானது. 5000 அல்லது அதற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட, மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 55 வயது வரை

பிரிவுகள்: ஏற்கனவே ஆயுள் காப்பீடு ஆலோசகராக இருந்தவர்கள், ஏற்கனவே ஏதாவது ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் முன்னாள் முகவராக இருந்தவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மஹிலா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், முன்னாள் இராணுவத்தினர், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், வேலையில்லா இளைஞர்கள்/ சுய வேலைவாய்ப்புள்ள இளைஞர்கள் அல்லது மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகள் கொண்ட யார் வேண்டுமானாலும் நேர்காணலுக்கு நேரில் வரலாம். இந்தப் பிரிவுகளில் ஏதேனும் ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் முகவர்கள்/ ஆயுள் காப்பீடு ஆலோசகர்கள் பிரிவில் தற்போது காலி இடங்கள் இல்லை.

கூடுதல் தகுதி: காப்பீட்டுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடிய அனுபவம் கணினி அறிவு/ உள்ளூர் பகுதி பற்றிய அறிவு இருத்தல் நலம்.விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பம், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இரண்டு; வயதுக்கான சான்றிதழ், கல்வித் தகுதிக்கான சான்றிதழ், அனுபவம் ஏதேனும் இருப்பின் அற்கான சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நேரில் வரலாம்.

Leave your comments here...