சதுரகிரி மலையில் மகாளய அமாவாசைக்கு பக்தர்கள் குவிந்தனர் – அதிகாலையில் மலைக்குச் செல்ல வரிசையில் நின்ற பக்தர்கள்..!

ஆன்மிகம்

சதுரகிரி மலையில் மகாளய அமாவாசைக்கு பக்தர்கள் குவிந்தனர் – அதிகாலையில் மலைக்குச் செல்ல வரிசையில் நின்ற பக்தர்கள்..!

சதுரகிரி மலையில் மகாளய அமாவாசைக்கு பக்தர்கள் குவிந்தனர் – அதிகாலையில் மலைக்குச் செல்ல வரிசையில் நின்ற பக்தர்கள்..!

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது, பிரசித்தி புகழ்பெற்ற சதுரகிரிமலை என்று அழைக்கப்படும் மகாலிங்கமலை. அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள மகாலிங்கமலைக்குச் செல்ல, மாதத்தில் எட்டு நாட்கள் மட்டுமே வனத்துறையினர் அனுமதி வழங்குவார்கள்.

பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக, பல ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். அமாவாசை தினமான இன்று மலைக்குச் செல்வதற்காக, இரவிலிருந்தே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். காலையில் வனத்துறை அனுமதி வழங்கியவுடன் பக்தர்கள் மலைக்குச் செல்ல துவங்கினர். சந்தரமகாலிங்கம் சுவாமி, சந்தனமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமகாலிங்கம் சுவாமி பக்தர்களுக்கு காட்சி தந்தார். கடந்த ஐந்து மாதங்களாக வைரஸ் தொற்று காரணமாக, பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்களுக்குப்பின் மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பதால், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலைக்கு வந்துள்ளனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும், பக்தர்கள் பாதுகாப்பு பணியிலும் ஏராளமான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மலைப்பகுதிகளில் உள்ள நீரோடை பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளையும் மலைக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave your comments here...