தேசத்தின் நம்பிக்கை மோடி : தூய்மை பாரதம் நலத்திட்ட விழாவில் பத்திரிகையாளர் வி.எஸ் இராமன் புகழாரம்..!

அரசியல்

தேசத்தின் நம்பிக்கை மோடி : தூய்மை பாரதம் நலத்திட்ட விழாவில் பத்திரிகையாளர் வி.எஸ் இராமன் புகழாரம்..!

தேசத்தின் நம்பிக்கை மோடி : தூய்மை பாரதம் நலத்திட்ட விழாவில் பத்திரிகையாளர் வி.எஸ் இராமன் புகழாரம்..!

பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் 70 ஆவது பிறந்த நாள் விழா தூய்மை பாரத இயக்கம் சார்பில் சென்னை வில்லிவாக்கத்தில் நடை பெற்றது. வில்லிவாக்கம் ஒருங்கிணைப்பாளர் பாலாஜி ஏற்ப்பாட்டில் நடை பெற்ற இந்த விழாவில் தூய்மை பாரத இயக்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.சி.சங்கர் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கொரோனா போர் வீரர்களான தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட உதவிகள் வழங்கிய மூத்த பத்திரிகையாளரும், ஆன்மீக சொற்பொழிவாளருமான வி.எஸ் இராமன் கலந்து கொண்டு பேசுகையில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று தொடங்கபட்ட தூய்மை பாரதம் இயக்கம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் கனவு திட்டமாகும் .

அந்த திட்டத்தை தேசத்தின் நம்பிக்கை நாயகன் பிரதமர் மே௱டி அவர்களின் திருக்கரத்தால் தொடங்கபட்டது.கிராம புறங்கள் முதல் நகர் புறம் வரையிலும் தூய்மை பாரத இயக்கத்தின் பணிகள் மகத்தான பணிகளை செய்து வருகிறது.

உலக நாட்டில் பாரதம் தலை நிமிர்ந்து நிற்கிறது அதற்கு காரணம் பிரதமர் மே௱டி அவர்களின் மகத்தான பணிகளாகும் . இந்த பிறந்த நாள் ஏழை எளிய மக்களின் துயர்களை துடைக்கும் நாளாக அமையும் என மூத்த பத்திரிகையாளர் வி.எஸ் இராமன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் மது பிரகாஷ், தமிழ் நாடு பால் வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் பால்ராஜ், தூய்மை பாரத இயக்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் ராஜாராமன், மத்திய சென்னை ஒருங்கிணைப்பாளர் ஜீவரத்தினம், கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராகுல்,தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், கிருஷ்ணகிரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவப்பிரகாசம், திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கபட்டது .

Leave your comments here...