ராஜ்யசபா துணைதலைவராக 2-வது முறை ஹரிவன்ஷ் நாராயண் சிங் தேர்வு

அரசியல்

ராஜ்யசபா துணைதலைவராக 2-வது முறை ஹரிவன்ஷ் நாராயண் சிங் தேர்வு

ராஜ்யசபா துணைதலைவராக 2-வது முறை ஹரிவன்ஷ் நாராயண் சிங் தேர்வு

மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஸ் நாராயண் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ஹரிவன்ஸ் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக, ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.பி., மனோஜ் ஷா போட்டியிட்டார்.

எனினும் அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தரப்பில், பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியது. இதையடுத்து பொது வேட்பாளராக , ராஷ்டிரீய ஜனதா தள கட்சி எம்.பி., யான மனோஜ் ஜா நிறுத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நடந்த பார்லி. முதல் நாள் கூட்டத்தொடரில் ஹரிவன்ஷ் நாராயண்சிங் மீண்டும் ராஜ்யசபா துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.வாக்கெடுப்பு நடைபெற்ற பிறகு மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஹரிவன்ஸ் வெற்றி பெற்றதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். தேசிய ஜனநாயாக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஸ் குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டார்.

ஹரிவன்ஸ் சபையின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இது இரண்டாவது முறையாகும். நான் அவரை வாழ்த்துகிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. யும் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...