பேராவூரணி அருகேயுள்ள பத்துக்காடு பகுதியில் சாலையை சீரமைக்கக் கோரிக்கை.!
- September 13, 2020
- jananesan
- : 964
- Road
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள அழகியநாயகிபுரம் ஊராட்சி கரிசவயல் – பத்துக்காடு பகுதியில், சேதமடைந்த தார்ச் சாலைகளை சீரமைத்து தரவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் சார்பில் இப்றாகிம் மற்றும் உதவும் கரங்கள் சமூக சேவை அமைப்பு சார்பில், மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது,
“தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் அழகியநாயகிபுரம் ஊராட்சியில் கரிசவயல் கிராமத்தில், சாலைகள் பழுதடைந்த நிலையில் உள்ளது.
இப்பகுதியில், அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் ஒரு நாளைக்கு முப்பதுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இவ்வழியாக சென்று வருகின்றன.
கரிசவயல் (பத்துக்காடு) பகுதியில் கடந்த 5 வருடத்துக்கும் மேலாக ஒட்டங்காட்டில் இருந்து பத்துக்காடு வழியாக பட்டுக்கோட்டை செல்லும் தார்ச் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இப்பகுதியில் சாலை சேதமடைந்த நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டும் பல விபத்துக்கள் நடந்துள்ளது,
குறிப்பாக, செருபாலக்காட்டில் இருந்து கரிசவயல், அழகிய நாயகிபுரம், வழியாக பத்துக்காடு முக்கம் வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து (குண்டும் குழியுமாக) உள்ளது.
எனவே, சாலையை சரி செய்து கொடுக்குமாறு, உதவும் கரங்கள் அமைப்பு சார்பாக கடந்த வருடம் 2019ல், ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம், வாய்மொழியாக முறையிட்டோம். “அவர் 2020 பிப்ரவரிக்குள்ளாக சாலையை அகலப்படுத்தி, சாலை முழுமையும் செப்பனிடப்படும். அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது” என்று உறுதியளித்தார்.
Leave your comments here...