தமிழகம்
சிவன் கோயிலில் பிடிபட்ட 12அடி மலைப்பாம்பு..!
- September 13, 2020
- jananesan
- : 767
- Snake
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சி சிவன் கோயில் பிரசித்தி பெற்றதாகும்.இக்கோயிலில் சுத்தம் செய்யும் பணியில் ஊரக வேலைவாய்ப்பு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில் அங்கு இருந்த சிறிய புட்களில் 12அடி மலைப்பாம்பு இருந்ததை கண்டு பீதியடைந்தனர்.
இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் தேவி பழனிச்சாமி, துணைத்தலைவர் பழனிவேலு ஊராட்சி செயலாளர் மோகன்ராஜ், ஆகியோர் இணைந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து வனச்சரக அலுவலர் மேரிலென்சி,வனவர் மேகலா ஆகியோரது அறிவுறுத்தலின்படி வனக்காப்பாளர் கனகவள்ளி,வனக்காவலர் கருணாநிதி ஆகியோர் சிவன்கோயிலில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை பிடித்து செவிலி மலையில் விட்டனர்.
உடனடியாக விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினருக்கு நூறுநாள் பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
Leave your comments here...