பாலமேட்டில் கால்நடை மருந்தக கட்டிட அடிக்கல் நாட்டு விழா..!

தமிழகம்

பாலமேட்டில் கால்நடை மருந்தக கட்டிட அடிக்கல் நாட்டு விழா..!

பாலமேட்டில் கால்நடை மருந்தக கட்டிட அடிக்கல் நாட்டு விழா..!

மதுரை மாவட்டம், பாலமேட்டில் ரூ. 31 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்டவுள்ள புதிய கால்நடை மருந்தகத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவானது, சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.

பாலமேடு கிராமத்தில் சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கால்நடை மருந்தக கட்டிடத்தில் பழுது ஏற்பட்டதால், புதிய கட்டிடம் கட்ட, பாலமேடு பகுதி கால்நடை வளர்போர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தன.இதையடுத்து, சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம் முயற்சியால், இந்த புதிய கட்டிட அடிக்கல் நாட்டுவிழாவானது பாலமேட்டில், நடைபெற்றது.

இந்த விழாவில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமாறன், அதிமுக ஒன்றியச் செயலர் ரவிச்சந்திரன், பாலமேடு நகரச் செயலாளர் குமார், மகாலிங்கசுவாமி மடத்துக் கமிட்டித் தலைவர் ராஜேந்திரன், செயலர் வேலு, முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் தமிழ்செல்வி, கால்நடை மருத்துவர்கள் சுரேஷ்குமார், நவநீதகிருஷ்ணன், அய்யூர் நடராஜன், மனோகரன், சோணை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave your comments here...