மீண்டும் ஓட தொடங்கும் அரசு விரைவுப் பேருந்துகள் பயணம் செய்ய பயணிகள் அச்சமா.? பொதுமக்களிடம் கருத்து கேட்பு..!

சமூக நலன்

மீண்டும் ஓட தொடங்கும் அரசு விரைவுப் பேருந்துகள் பயணம் செய்ய பயணிகள் அச்சமா.? பொதுமக்களிடம் கருத்து கேட்பு..!

மீண்டும் ஓட தொடங்கும் அரசு விரைவுப் பேருந்துகள் பயணம் செய்ய பயணிகள் அச்சமா.? பொதுமக்களிடம் கருத்து கேட்பு..!

சுமார் 175 நாட்களுக்கு பிறகு தொலைதூரத்தில் இருந்து வருகின்ற ஆறாம் தேதி இரவு முதல் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணமானது பாதுகாப்பான பயணம் என பொதுமக்கள் சிலரிடம் கருத்துக்களை கேட்டு அறிந்தோம்

பொதுமக்கள் சிலர் கொடுத்த பதில் இதோ தங்கள் பார்வைக்கு: சுமார் 175 நாட்களுக்கு பிறகு ஓட தொடங்கு உள்ளது அரசு பேருந்துகள் ஓட்டுனர்கள் இரவு நேரங்களில் பேருந்துகளை இயக்க முடியுமா என முதல் கேள்வி எழுப்பினார் கூறும் பொது மக்கள் பல நாள் இரவில் தூங்கிய அவருக்கு திடீரென்று இரவு நேரங்களில் வாகனங்களை இயக்க அனுமதித்தால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது எனவும் இதனால் உரிய பயிற்சிகள் அடித்த பிறகு வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

மற்றொரு பயணி நம்மிடம் தெரிவிக்கையில்:- நீண்ட நாட்களுக்கு பிறகு நெடுந்தூர பேருந்து இயக்கம் ஓட்டுநர்கள் பயிற்சி பெற்று வகை வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் மேலும் பயிற்சி பெற்ற நீண்ட கால அனுபவம் உள்ள ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் எனவும் மற்றொரு பொதுமக்களிடம் கருத்து தெரிவித்தார் உதாரணத்திற்கு நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பேருந்து மோதியதில் 4 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது என அதை தெரிவித்தார் இவ்வாறு நடக்கும் போது அதுவும் பகலிலே இந்த விபத்து நடைபெற்றது அதனால் முறையான பயிற்சி பெற்று அனுபவமுள்ள ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்க அனுமதித்தால் பயணிகள் உயிருக்கு பாதுகாப்பாக இருக்கும் என பயணி தெரிவித்தார்.

மூன்றாவது பயணி நம்மிடம் மிக முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்தார்:_ வாகன ஓட்டுனர்கள் அனைவரும் உடல் தகுதியுடன் உள்ளார்களா அவர்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொண்ட பிறகே வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்பது மேலும் 50 வயதை கடந்த ஓட்டுநர்களை முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் சர்க்கரை ரத்தக் கொதிப்பு மற்றும் இதய நோய் உள்ளிட்ட வியாதிகள் உள்ள ஓட்டுனர்களை அவர்கள் வாகனம் ஓட்டுவதற்கு தகுதியானவர்கள் என உள்ளார்களா என பரிசோதனை செய்த பிறகே வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்பதே அவருடைய முக்கியமான கோரிக்கையாக உள்ளது.

பலரும் பொதுமக்கள் ஒவ்வொரு கருத்துக்களாக தெரிவித்தனர் பல கருத்துக்களை இதில் பதிவு செய்ய இயலாத காரணத்தினால் தமிழக அரசு பொதுமக்களின் ஒரு சில கருத்துக்களை ஏற்று ஆராய்ந்து பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு உறுதி அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

Leave your comments here...