சதுரகிரி மலையில் பௌர்ணமி நாளில் ஒன்பது மணி நேரத்தில், 2500 பக்தர்கள் தரிசனம்.!

ஆன்மிகம்தமிழகம்

சதுரகிரி மலையில் பௌர்ணமி நாளில் ஒன்பது மணி நேரத்தில், 2500 பக்தர்கள் தரிசனம்.!

சதுரகிரி மலையில் பௌர்ணமி நாளில் ஒன்பது மணி நேரத்தில், 2500 பக்தர்கள் தரிசனம்.!

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை. அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல் உள்ள கோவிலில், மகாலிங்கம் சுவாமியை தரிசிக்க தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வாடிக்கை. கடந்த ஐந்து மாதங்களாக கோவில்கள் மூடப்பட்டதால், சதுரகிரி மலைமீதும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும் சதுரகிரி மலைக்கு அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷ நாட்களில் மட்டுமே மலைமீது செல்வதற்கு வனத்துறை அனுமதி வழங்கும். நேற்று முன் தினம் பௌர்ணமி நாளில் 2500 பக்தர்கள் மலைமீதுள்ள மகாலிங்க சுவாமி கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். பௌர்ணமி நாளில் ஆறு மணி நேரமும், மறுநாள் மூன்று மணி நேரம் மட்டுமே பக்தர்கள் மலைமீது செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

சுமார் ஒன்பது மணி நேரத்தில் 2500 பக்தர்கள் மட்டுமே மலை மேல் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலான பக்தர்கள் அடிவரப்பகுதியில் உள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave your comments here...