திருவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்து – கார், லோடு வேன் மோதியதில் இரண்டு பேர் படுகாயம்..!

தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்து – கார், லோடு வேன் மோதியதில் இரண்டு பேர் படுகாயம்..!

திருவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்து – கார், லோடு வேன் மோதியதில்  இரண்டு பேர் படுகாயம்..!

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில், மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிள்ளையார் நத்தம் விலக்கு பகுதியில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது.

கடலூரில் இருந்து குற்றாலம் நோக்கி மரக்கன்றுகளை ஏற்றி வந்த லோடு வேனும், ராஜபாளையத்திலிருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்த காரும், எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லோடு வேன் தலைகீழாக கவிழ்ந்தது. மேலும் இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர் ஒருவரும், லோடு ஆட்டோ ஓட்டி வந்த டிரைவரும் படுகாயம் அடைந்தனர். அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டனர். காயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து திருவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave your comments here...